தமிழக சட்டசபை கூட்டத்தொடர் என்று தொடங்கிய நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் வெளியேறினார். அவர் அவைக்கும் நுழைந்ததுமே அவருக்கு எதிராக கோஷங்கள் எழுந்த நிலையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடி முடிந்ததும் அவர் கிளம்பிவிட்டார். முன்னதாக ஆளுநர் மாளிகை தேசிய கீதம் பாடப்படாததால் தான் ஆளுநர் வெளியேறியதாக விளக்கம் கொடுத்த நிலையில் சில நிமிடங்களில் அந்த பதிவை நீக்கியது. இந்நிலையில் ஆளுநருக்கு எதிராக கோஷம் எழுப்பியதால் காங்கிரஸ் எம்எல்ஏக்களை சபாநாயகர் அப்பாவு அவையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார்.
இதன் காரணமாக செல்வப் பெருந்தகை உள்ளிட்ட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வெளியேறினார். இதைத்தொடர்ந்து யார் அந்த சார் என்ற பேட்ச் அணிந்த அதிமுகவினர் வந்த நிலையில் அவர்கள் சட்டசபையில் கோஷம் எழுப்பியதால் அவர்களையும் அவை காவலர்களை விட்டு வெளியேற்றுமாறு சபாநாயகர் உத்தரவிட்டார். மேலும் இதனால் அவர்களும் தற்போது சபையை விட்டு வெளியேறிவிட்டனர். இதேபோன்று அண்ணா பல்கலைக்கழக விவகாரம் குறித்து கேள்வி எழுப்பிய பாமக எம்எல்ஏக்களும் அவையை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.