குழந்தையை ஒழுக்கமா வளர்க்கிறோம்ங்கற பேர்ல பெற்றோர் செய்யும் '5' தவறுகள்!!
GH News January 06, 2025 07:13 PM

ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தை ஒழுக்கமாக வளர வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஏனெனில் ஒழுக்கமாக வளரும் குழந்தையின் நடவடிக்கையானது, பிற குழந்தைகளிடமிருந்து சற்று வேறுபட்டிருப்பது நீங்கள் பார்த்திருப்பீர்கள். மேலும் ஒழுக்கமாக இருக்கும் குழந்தையின் அளுமை எப்போதுமே மேம்படும். எனவே ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைக்கு கல்வியுடன், நல்ல ஒழுக்கத்தையும் கற்பிப்பது மிகவும் அவசியம்.

ஆனால், இன்றைய காலகட்டத்தில் சில குழந்தைகள் செய்யும் குறும்புத்தனத்தால் அவர்களை கட்டுப்படுத்துவது அல்லது ஒழுங்குபடுத்துவது மிகவும் சவாலான காரியம். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளங்களால் குழந்தைகளிடம் ஒழுக்கம் என்ற பெயருக்கு இடமில்லை மேலும், ஒழுக்கம் இல்லாமல் நடந்து கொள்ளும் குழந்தையை பார்ப்போர்கள் 'என்ன பிள்ளை இது; ஒழுக்கங்கேட்டு தனமா நடக்குது' என்று பிற சொல்லுவதை நீங்கள் கண்டிப்பாக கேட்டிருப்பீர்கள். எனவே, பெற்றோர்கள் தங்கள் குழந்தை சிறுவயது முதலே ஒழுக்கமாக வளர வேண்டும் என்பதற்காக பல்வேறு வழிகளை கடைப்பிடிக்கிறார்கள். ஆனால், சில சமயங்களில் அவை குழந்தைகள் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, அதாவது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்று பல பெற்றோர்களுக்கு தெரிவதில்லை. இத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்கும் போது பெற்றோர்கள் செய்யக்கூடாத சில தவறுகள் பற்றி இங்கு பார்க்கலாம்.

குழந்தையிடம் எதிர்மறையான அணுகுமுறை:

பிள்ளையை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்ற பெயரில் பல பெற்றோர்கள் இந்த தவறை செய்கிறார்கள். அதாவது பிள்ளைக்கு ஒழுக்கத்தை கற்பிக்கும் போது பெற்றோர்கள் தங்கள் குழந்தையிடம் எதிர்மறையாக நடந்து கொள்வார்கள். சொல்லப்போனால் இந்த தவறை அவர்கள் அடிக்கடி செய்கிறார்கள்.. ஆனால் இந்த அணுகு முறையில் குழந்தைகளிடம் பெற்றோர்கள் நடந்து கொண்டால் அது குழந்தையின் மீது எதிர்மறையான தாக்கத்தை தான் ஏற்படுத்தும். இதனால் அவர்களது ஆரோக்கியம் கூட மோசமடைய வாய்ப்புள்ளது.

குழந்தைக்கு முன்மாதிரியாக இரு!

பொதுவாக குழந்தைகள் தங்கள் பெற்றோரிடம் தான் பல விஷயங்களை கற்றுக் கொள்கிறார்கள். சொல்லப்போனால், பெற்றோரை பார்த்து தான் குழந்தைகள் வளருவார்கள். ஒருவேளை நீங்கள் உங்கள் குழந்தை முன் ஒழுக்கமில்லாமல் நடந்து விட்டு உங்கள் குழந்தை மட்டும் ஒழுக்கமாக வளர வேண்டும் என்று நினைத்தால் அது சாத்தியமில்லை. இப்படி நீங்கள் நடந்து கொள்வதன் மூலம் அது அவர்களுக்கு மோசமான விளைவை ஏற்படுத்தும். முக்கியமாக நீங்கள் உங்கள் குழந்தைக்கு ஏதாவது கற்பிக்க விரும்பினால், முதலில் நீங்கள் முன்மாதிரியாக இருங்கள். பிறகு தானாகவே உங்கள் குழந்தையும் ஒழுக்கத்துடன் வளருவார்கள்.

இதையும் படிங்க:  

ரொம்பவே கண்டிப்புடன் இருக்காதே!

பல பெற்றோர்கள் குழந்தைக்கு ஒழுக்கத்தை கற்பிப்பதாக அவர்களிடம் ரொம்பவே கண்டிப்புடன் நடந்து கொள்வார்கள். அதை செய்து செய்யாதே என்று குழந்தைங்க ரொம்பவே கட்டுப்படுத்தினால் அது குழந்தைக்கு எதிர்மறையான தாக்கத்தை தான் ஏற்படுத்தும். எனவே, ஒழுக்கம் என்ற பெயரில் குழந்தைகளிடம் ரொம்பவே கண்டிப்புடன் நடந்து கொள்ள வேண்டாம்.

இதையும் படிங்க:  

குழந்தைகளின் முயற்சியை புறக்கணிப்பது:

குழந்தைகளை ஒழுக்கமாக வளர்க்க வேண்டும் என்ற பெயரில் பல சமயங்களில் பல பெற்றோர் செய்யும் மிகப்பெரிய தவறுகளில் இதுவும் ஒன்றாகும். இது குழந்தைகள் மீது எதிர்மறையான தாக்கத்தை தான் ஏற்படுத்தும். எனவே உங்கள் குழந்தை ஏதாவது விஷயங்களை செய்தால் அவர்களை ஊக்கப்படுத்துவது மிகவும் அவசியம். இதனால் அவர்களது மனம் உறுதியடையும். மேலும் தொடர்ந்து முயற்சி செய்வதற்கான தைரியம் அவர்களுக்கு கிடைக்கும். முக்கியமாக நீங்கள் உங்கள் குழந்தையிடம் பெற்றோராக இல்லாமல் ஒரு நண்பராக அவர்கள் செய்த முயற்சியை பாராட்டுங்கள். இப்படி நீங்கள் நடந்து கொண்டால் உங்கள் குழந்தை தானாகவே ஒழுக்கமாக வளருவார்கள்.

குழந்தையின் பேச்சை புறக்கணிப்பது:

பலரது வீடுகளில் பெற்றோர் இந்த தவறை தான் செய்கிறார்கள். பிள்ளைகள் ஏதாவது சொல்ல விரும்பினால்,  என்ன சொல்ல வருகிறார்கள் என்று காது குடுத்து கூட கேட்காமல் அவர்களை ஒரேடியாக புறக்கணித்து விடுகிறார்கள். ஆனால் இது தவறு. இப்படி நீங்கள் உங்கள் குழந்தையிடம் நடந்து கொண்டால் அதனால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள். எனவே அவர்கள் என்ன சொல்வருகிறார்கள் என்பதை முதலில் கேட்டு அதற்குரிய பதிலை சொல்லுங்கள்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.