சென்னை கிண்டியில் டிங்கர் வேலை செய்வதற்காக எடுத்து வைக்கப்பட்டிருந்த ஆட்டோக்களை ஜேசிபி இயந்திரம் மூலம் நொறுக்கி லாரியில் ஏற்றி வந்து சுடுகாட்டில் கொட்டிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னை கிண்டி-ஆலந்தூர் சாலையில் உள்ள ஆட்டோ டிங்கர் கடையில் ஆட்டோவில் சில பழுது சரி செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் சென்னை மாநகராட்சி ஊழியர்கள் சாலையில் போக்குவரத்திற்கு இடையூறாக ஆட்டோக்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறி சாலையில் இருந்த ஆட்டோக்களை லாரி வைத்து ஜேசிபி இயந்திரம் உதவியுடன் ஆட்டோக்களை நொறுக்கி வண்டியில் ஏற்றி கொண்டு வந்து அருளாயம் பேட்டை சுடுகாட்டில் குப்பை போல் கொட்டிவிட்டு சென்றதால் ஆட்டோ ஓட்டுநர்கள் மிகுந்த வேதனைக்கு உள்ளாக்கி உள்ளனர்.
குறிப்பாக சாலை போக்குவரத்து பாதிப்பு ஏற்படும் வகையில் ஆட்டோக்கள் நின்று இருந்தால் அவற்றை காவல் நிலையம் அல்லது மாநகராட்சி அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று இருந்தால் நாங்கள் அதனை சட்டபூர்வமாக அணுகி ஆட்டோவை மீட்டிருப்போம் ஆனால் ஆட்டோக்கள் தற்போது சுக்கு நூறாக உடைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்டோ டிங்கரிங் வேலை செய்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் வருமானம் இல்லாமல் இருந்தோம் தற்பொழுது மீண்டு வர முடியாத அளவிற்கு எங்களுடைய ஆட்டோக்கள் முழுவதுமாக உடைத்து நோறுக்கப்பட்டுள்ளது உள்ளது என வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.
மேலும் இந்த செயலில் ஈடுபட்ட மாநகராட்சி அதிகாரிகள் மீது வழக்கு தொடுக்க இருப்பதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் மேலும் இது குறித்து ஆட்சியல அதிகாரிகள் கவனம் செலுத்த வேண்டும் இது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது என்றும் தெரிவித்தனர். இரண்டு மூன்று நாட்களில் ஆட்டோக்கள் ரெடியாகி மீண்டும் ஆட்டோ ஒட்டி பிழைப்பை நடத்தலாம் என்று இருந்த நிலையில் தற்போது தங்களுடைய ஆட்டோக்கள் முழுவதுமாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக இதற்கு காரணமான அதிகாரிகள் தங்களுடைய ஆட்டோக்கள் சரி செய்து தர வேண்டும் என்றும் தெரிவித்தனர் .