இந்த திட்டம் பற்றி தெரியுமா ? வட்டி மட்டும் 2,54,272 தொகை கிடைக்கும்..!
Newstm Tamil January 08, 2025 11:48 AM

போஸ்ட் ஆபீஸ் ரெக்கர்ரிங் டெபாசிட் திட்டத்தில் மாதந்தோறும் சிறு தொகையை முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெறலாம். தற்போது தபால் அலுவலகம் RD திட்டத்திற்கு தற்போது 6.7 சதவீத வட்டி விகிதம் வழங்கி வருகிறது. போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு முதிர்வு காலம் ஐந்து ஆண்டுகளாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தில் மாத மாதம் ரூ. 5,000 டெபாசிட் செய்யும் போது ஐந்தாண்டுகளில் முதலீடு தொகை 5 லட்சமாக இருக்கும். ரெக்கரிங் திட்டத்திற்கு வழங்கப்படும் 6.7 சதவீத வட்டி விகிதத்தின் வாயிலாக 56,830 ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் 5 வருடத்தில் மெச்சூரிட்டி தொகையாக 3,56,830 ரூபாயை முதலீட்டாளர் பெறலாம்.

மேலும், 5 ஆண்டுகள் இந்த திட்டத்தை நீடிக்கும் போது பத்து ஆண்டுகளில் முதலீட்டு தொகை டபுளாக ரூ. 6 லட்சமாக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ. 2,54,272 தொகை வருமானமாக கிடைக்கும். இதன் மூலம் மொத்த முதிர்வு காலத்திற்கு பின் ரூ. 8,54,272 தொகையை முதலீட்டாளர் பெறலாம். ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் கடன் பெறும் வசதியும் உள்ளது.

இந்த திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் தொகைக்கு அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது. முதலீட்டாளர் தங்களால் இயன்ற அளவு டெபாசிட் செய்யலாம். 100 ரூபாய் வைத்தும் ஒருவரால் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்தில் கணக்கு துவங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.