கடலூர், ராமநாதபுரம் மாவட்டங்களில் 9 நாட்கள் தொடர் விடுமுறை... குஷியில் மாணவர்கள்!
Dinamaalai January 08, 2025 11:48 AM

தமிழகத்தில் பொங்கல் பண்டிகைக் கொண்டாட்டங்கள் களைக்கட்ட துவங்கி உள்ள நிலையில், ஜனவரி 17ம் தேதி அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ள நிலையில், ஜனவரி கடலூர் மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ளூர் விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் அனைத்து பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதைப் போலவே ராமநாதபுரம் மாவட்டத்தில் உத்தரகோசமங்கை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 13ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜனவரி 13ம் தேதி பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகங்களுக்கு அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் 11ம் தேதி சனிக்கிழமை துவங்கி ஜனவரி 19ம் தேதி வரை தொடர்ந்து 9 நாட்களுக்கு பொங்கல் விடுமுறை தினங்களாக இந்த இரு மாவட்டத்தில் உள்ளவர்களுக்கும் தொடர் விடுமுறை தினங்களாக வருகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.