தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரை இருக்கும் நிலையில் ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் 6 நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பொங்கல் பண்டிகைக்காக மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்பதால் கூட்டம் அலைமோதும். இதன் காரணமாக தற்போது அரசு சிறப்பு பேருந்து சேவை இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
அதன்படி பொங்கல் பண்டிகைக்கு 14,104 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதேபோன்று பண்டிகை முடிந்து சொந்த ஊருக்கு செல்லும் மக்கள் வசதிக்காகவும் பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன்படி சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 10,460 பேருந்துகளுடன் கூடுதலாக 5290 பேருந்துகள் இயக்கப்படும். இதேபோன்று பிற ஊர்களுக்கு 6926 பேருந்துகள் இயக்கப்படும். மேலும் மொத்தமாக 22,676 பேருந்துகள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.