தமிழில் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி 8 வது சீசன் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 8 நாட்களில் 4 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற, ரயான் முதல் ஆளாக ஃபைனலுக்கும் முன்னேற்றம் கண்டுள்ளார். இதனிடையே, பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் ஒவ்வொருவராக மீண்டும் என்ட்ரி கொடுத்த வண்ணம் உள்ளனர்.
கோபத்தில் அருண் பிரசாத்
அந்த வகையில், Fatman ரவீந்தர், சுனிதா, ரியா, வர்ஷினி வெங்கட் உள்ளிட்ட பலரும் வருகை தந்தனர். அப்படி இருக்கையில், 2 வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அர்னவ் வருகைக்காக காத்திருந்து வருகிறார் அருண் பிரசாத். அந்த வகையில், அர்னவ் மீது அதிக கோபத்தில் இருக்கும் அருண் பிரசாத்திடம் வெளியே போன போட்டியாளர்கள் திரும்ப வரும் போது அவர்களுக்கு எந்த வாசகத்தை கொடுக்க விரும்புகிறீர்கள் என்றும் கேட்டிருந்தார்.
இதற்கு, “பெரியவங்க இருந்தா கூட்டிட்டு வாங்க” என்ற வாசகத்தை அர்னவிற்கு சமர்ப்பிக்கிறார் அருண். அதற்கான காரணம் சொன்ன அருண் பிரசாத், இது என்ன நிகழ்ச்சி என்பதே தெரியாமல் ஸ்கூலில் இருப்பது போல தான் ஒரு நல்ல பையன் என்பதை காட்டிக் கொள்ள முயற்சி செய்ததாக கூறுகிறார். இதற்கு காரணம், இருந்த கொஞ்ச நாளில் பிக் பாஸ் வீட்டிற்குள் நடித்து விட்டு வெளியேறியதும் மேடையில் நின்று ஆண்கள் அனைவரையும் மிக திமிராக அர்னவ் எதிர் கொண்டது தான்.
அர்னவ் உள்ள வரட்டும்
தொடர்ந்து அர்னவ் பற்றி பேசும் அருண் பிரசாத், “அவர் ஒரு லூசு. இத்தனை மக்கள் முன்னாடி, இத்தனை கேமரா முன்னாடி அர்னவ் அப்படி பேசுனாருல்ல, அதே மாதிரி அவரை திரும்ப நான் வச்சு செய்வேன். மற்ற அனைவருமே நம்மை பற்றி தான் விமர்சனம் செய்வார்கள். ஆனால், அர்னவ் தான் Character Assassination செய்து நம்மை வெளியே தப்பாக காட்ட வேண்டுமென நினைத்தார்.
காலையில் எழுந்து நன்றாக மேக்கப் போட்டு நாம் சமைத்து கொடுத்ததையே சாப்பிட்டு விட்டு நம்மளையே விமர்சித்து விட்டு போனார் அர்னவ். இங்கிருந்து வெளியே போனால் அர்னவை சந்திக்க வேண்டும் என்று தான் நினைத்து கொண்டிருந்தேன்” என அருண் பிரசாத் ஆதங்கத்தில் கூறுகிறார்.
என்னென்ன பேசுனாரு..
இதன் பின்னர் பேசும் முத்து, “அர்னவ் செய்த பெரிய தப்பு, மேடைக்கு சென்று விஜய் சேதுபதி அருகே நின்று பேசிய அவர் ஏன் வீட்டிற்குள் இருக்கும் போது பேசவில்லை என்பது தான். ஏன் நீங்கள் பிக் பாஸ் வீட்டில் அப்போது நடித்தீர்கள்?. பிக் பாஸ் ஆக்டிங் செய்வதற்கான இடம் கிடையாது” என கூறுகிறார். தொடர்ந்து பேசும் அருண் பிரசாத், “அர்னவ் வெளியேறிய பின் பேசிய வார்த்தைகள் இன்னும் ஞாபகம் இருக்கிறது.
நீங்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் ஆதரவு தெரிவித்து விட்டு, மாறி மாறி ஜிஞ்சங் அடிச்சுகிட்டு இருக்கீங்கனு பெரிய பில்லா, ரங்கா பாட்ஷா மாதிரி பேசுனாரு” என பேசுகிறார்.