கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் நடந்த திருவிழாவின்போது யானைக்கு மதம் பிடித்ததால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் யானையால் தூக்கி வீசப்பட்ட சம்பவத்தில்ஒருவர் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
மலப்புரம் மாவட்டம் திரூர் புதிய அங்காடி என்ற இடத்தில் இஸ்லாமிய பள்ளி ஒன்றில் கடந்த ஒரு வாரமாக திருவிழா நடைபெற்று வருகிறது. வேண்டுதலுக்காக தினமும் ஒவ்வொரு யானைகள் அலங்கரிக்கப்பட்டு பள்ளிக்கு கொண்டுவரப்பட்டு நேர்த்திக்கடன் செலுத்தப்பட்டு வந்த நிலையில், நேற்று 10-யானைகள் அணிவகுத்து நின்று திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது அணிவகுத்து நின்று கொண்டிருந்த ஸ்ரீ குட்டன் என்ற யானை மதம் பிடித்து கூட்டத்தில் அங்கும் இங்கும் ஓடியது.
திருவிழாவை காண நூற்றுக்கணக்கான மக்கள் கூடியிருந்த நிலையில் யானை ஓடியதால் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். இதில் ஸ்ரீ குட்டன் ஒருவரை தும்பிக்கையால் தூக்கி வீசி அவர் படுகாயம் அடைந்து வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற அனைவருக்கும் சிறு காயங்கள் ஏற்பட்டுள்ளது நேற்று நள்ளிரவு பன்னிரண்டரை மணி அளவில் சம்பவம் நடைபெற்று உள்ளது. திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்தபோது யானை மதம் பிடித்து அங்கும் இங்கும் ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.