உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள லக்கிம்பூர் பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்ததாக கருதி ஒரு வாலிபரை காவல்துறையினர் கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். நீதிமன்ற காவலில் அந்த வாலிபர் உயிரிழந்த நிலையில் உறவினர்கள் நியாயம் கேட்டுப் போராடினர். இந்நிலையில் அவர்களிடம் சென்ற லக்கிம்பூர் டிஎஸ்பி பிபி சிங் அந்த நபர் செத்துப்போயிட்டா என்ன பண்ண முடியும். இந்த சம்பவத்திற்காக எந்த ஒரு போலீஸ்காரர் மீது நடவடிக்கை எடுக்கப்படாது.
எந்தவிதமான இழப்பீடும் வழங்கப்பட மாட்டாது. உங்களால் எவ்வளவு நாட்கள் முடியுமோ அவ்வளவு நாட்கள் உடலை வைத்துக் கொள்ளுங்கள். உங்களால் முடிந்ததை செய்து பாருங்கள் என்று கோபத்துடன் கூறுகிறார். அந்த டிஎஸ்பி மிரட்டிய வீடியோவை உத்தரபிரதேச மாநிலத்தின் எதிர்க்கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.