கர்நாடக மாநிலத்தில் உள்ள மண்டியா மாவட்டத்தை சேர்ந்த ஒரு பெற்றோர் தங்கள் மகளை காணவில்லை கடந்த நவம்பர் மாதம் 23ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். தங்கள் மகளை அபிஷேக் கவுடா என்ற ஆசிரியர் கடத்திச் சென்றிருக்கலாம் என்று அவர்கள் புகார் கொடுத்திருந்த நிலையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். அதாவது அபிஷேக் கவுடா டியூஷன் நடத்தி வந்துள்ளார்.
இந்த டியூஷனுக்கு அந்த மைனர் சிறுமி சென்று வந்த நிலையில் அபிஷேக் கவுடா (25) அந்த சிறுமியை காதல் வலையில் வீழ்த்தினார். இதில் அபிஷேக்குக்கு ஏற்கனவே திருமணம் ஆகி 2 வயதில் ஒரு குழந்தை இருக்கிறது. அவர் சிறுமியை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு ஓடிய நிலையில் தற்போது தான் காவல்துறையினர் அவர்களை பிடித்துள்ளனர். அவர் மீது கடத்தல் மற்றும் பாலியல் வன்கொடுமை ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறுமியை மீட்ட போலீசார் அவரை சிறையில் அடைத்துள்ளனர்.