ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட்டிருந்தால் வெற்றி பெற்றிருப்பேன் என்று ஜோ பைடன் கூறியுள்ளார். கடந்த நவம்பரில் நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றார். டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் தோல்வியடைந்தார். ஜோ பைடன் ஆரம்பத்தில் ஜனநாயகக் கட்சி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.
இருப்பினும், அவரது பிரச்சாரத்தில் ஏற்பட்ட தொய்வு காரணமாக, ஜோ பைடனின் வேட்புமனுவுக்கு எதிர்ப்பு எழுந்தது. அப்போதுதான் கமலா ஹாரிஸ் களத்தில் இறங்கினார். இருப்பினும், அவர் பரிதாபமாக தோற்றார். இதை விமர்சித்த ஜோ பைடன், தான் போட்டியிட்டிருந்தால், ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருப்பேன் என்று கூறியுள்ளார். இது தற்போது ஜனநாயகக் கட்சியினரிடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.