நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பெரியார் குறித்து பேசியது சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அவருக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது வடலூர் காவல் நிலையத்தில் சீமான் மீது இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
அதன்படி கலவரத்தை தூண்டும் விதமாக பேசுதல் மற்றும் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் வகையில் பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் முன்னதாக பெரியார் பாலியல் இச்சை வரும்போது தாய் மகள் மற்றும் சகோதரிகளுடன் உடலுறவு கொள்ளுமாறு அவர் கூறியதாக கூறினார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.