பொதுவாக பீர் பல கடுமையான நோய்கள் ஏற்பட வழிவகுக்கும். அதிக பீர் குடிப்பதால் ஏற்படுத்தும் ஆபத்துகளில் சிலவற்றை பற்றி நாம் இப்பதிவில் காணலாம் ...
1.பீரில் கலோரிகள் அதிகம் உள்ளன. தொடர்ந்து பீர் அருந்துவது உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கும்.
2.தொடர்ந்து பீர் குடிப்பவர்களுக்கு தொப்பை ஏற்படுவதை கவனித்திருக்கலாம். அதை, ‘பீர் தொந்தி’ என்று செல்லமாக அழைப்பதை நீங்கள் கேட்டிருக்கலாம்.
3.அதிகப்படியான பீர் குடிப்பவர்களின் உடலில் இன்சுலின் சுரப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்படுகிறது. இதனால் நீரிழிவு நோயின் அபாயம் அதிகமாகும்.
4.இரத்த அழுத்தத்தில் மாறுபாடு ஏற்படுவது இயல்பானதாக இருக்கலாம். ஆனால், சில நேரங்களில் சில குறிப்பிட்ட வகையான உணவுகள் அல்லது பானங்கள் தொடர்ந்து உட்கொள்வது உயர் இரத்த அழுத்தம் ஏற்பட வழிவகுக்கும்.
5.இது ஒரு நல்ல அறிகுறி அல்ல மற்றும் பக்கவாதம் அல்லது இதய நோய்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கலாம்.
6.ஆல்கஹால் உங்கள் ஆயுளைக் குறைக்கும் என்பது வெறும் வாய் வார்த்தையல்ல, இது ஆராய்ச்சி மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.
7.எனவே, ஆல்கஹால் அதிகம் உள்ள மதுபானத்தை குடிக்காவிட்டாலும், அதிக அளவில் பீர் குடிப்பது ஆரோக்கியத்தில் அதே தாக்கத்தை ஏற்படுத்தும்.