ஒரே பாலின திருமணத்திற்கு அனுமதி இல்லை; மனுவை தள்ளுபடி செய்த உச்ச நீதிமன்றம்..!
Seithipunal Tamil January 10, 2025 09:48 AM

ஒரே பாலின ஜோடிகள் பாலியல் ரீதியில் உறவு வைத்துக்கொள்வது குற்றமல்ல என்று 2018-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. குறித்த தீர்ப்பை தொடர்ந்து, ஒரே பாலின ஜோடிகள், தாங்கள் திருமணம்  செய்துகொள்வதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கக்கோரி, உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விசாரித்த உச்சநீதிமன்றம், ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் அளிக்க முடியாது என தீர்ப்பளித்து இருந்தது.அத்துடன், ஒரே பாலின ஜோடிகள் திருமணம் செய்துகொள்வதற்கு சட்ட அங்கீகாரம் வழங்க, நாடாளுமன்றத்தில் சட்டம்தான் இயற்ற வேண்டும் என தீர்ப்பளித்தது.

ஒரே பாலின திருமணம் தீர்ப்பில் தவறு இல்லை. ஓபன்-கோர்ட் விசாரணைக்கு அனுமதி வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

தீர்ப்பில் வெளிப்படையான தவறு ஏதும் இல்லை. ஏற்கனவே வழங்கப்பட்ட தீர்ப்பில் எந்த தலையீடும் தேவையில்லை எனக் கூறி, 2023-ஆம் ஆண்டு ஒரே பாலின திருமணத்திற்கு சட்டப்பூர்வ அனுமதி வழங்க முடியாது என்ற உச்சநீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, தாக்கல் செய்யப்பட் மறு ஆய்வு மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.