சினிமா குறித்த அஜீத் அறிவிப்பால் ரசிகர்கள் அதிர்ச்சி.. அதிலும் ஒரு குட் நியூஸ் சொன்ன AK
Tamil Minutes January 11, 2025 12:48 AM

நடிகர் அஜீத் தற்போது துபாயில் நடைபெறும் கார் ரேஸ் பந்தயத்தில் கலந்து கொள்வதற்காக தனது குழுவினருடன் தீவிர பயற்சியில் ஈடுபட்டு வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட பயிற்சியின் போது அவரது கார் விபத்துக்குள்ளான வீடியோவானது சமூக வலைதளங்கல் வைரலாகியது. பின் அஜீத் சிறு காயமின்றி உயிர் தப்பினார் என்ற செய்தி வந்தவுடன் ரசிகர்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

துணிவு படம் வெளியாகி இரண்டு வருடங்கள் நிறைவடைந்த நிலையில் அடுத்ததாக அஜீத்துக்கு எந்தப் படமும் இதுவரை வரவில்லை. விடாமுயற்சி திரைப்படம் தள்ளிக் கொண்டே செல்கிறது. பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் ஜவ்வாக இழுத்துக் கொண்டே செல்கிறது.

இதனையடுத்து அடுத்து நடித்துவரும் படமான ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் குட் பேட் அக்லி திரைப்படம் ஏப்ரல் 10 அன்று வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

அஜீத்தை திரையில் காணாவிட்டாலும் ரேஸ் பயிற்சிகள் வீடியோவை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். இந்நிலையில் அஜீத்தின் நடிப்பு குறித்த தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. இனி வருடத்தில் அக்டோபர் முதல் மார்ச் வரையிலான இடைவெளியில் மட்டும் படப்பிடிப்பில் கலந்து கொள்ள உள்ளதாகவும், மற்ற மாதங்களில் ரேஸ் பயிற்சியில் ஈடுபட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன. நடிப்புக்கு இனி இடைவெளி கொடுத்து ரேஸில் கவனம் செலுத்த உள்ளதால் இனி அஜீத் படங்கள் ஒப்புக் கொள்வது மிகக் குறைவு என்பதால் ரசிகர்கள் வருத்தமடைந்துள்ளனர்.

விஜய்யும் நடித்து வரும் தளபதி 69 படத்துடன் தனது திரைப்பயணத்தினை முடித்துக் கொள்ள உள்ளதால் விஜய் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ள நிலையில் தற்போது அஜீத்தின் இந்த அறிவிப்பால் இனி இவர்களை திரையில் காண்பது மிக அரிதாக மாறிவிடும்.

அடுத்த தலைமுறை நடிகர்களான சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி போன்றோர் தற்போது சினிமாவில் ஜொலித்து வருவதால் இனி தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்களைக் கொண்டாடத் துவங்கி உள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.