தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் பண்டிகைகளில் மிகப்பெரிய பண்டிகை பொங்கல் பண்டிகை ஒன்று. பொங்கல் பண்டிகையானது, தமிழர்களின் அடையாளமாக திகழ்கிறது. நடப்பாண்டிற்கான பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 14, 15 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக ஜனவரி 17ம் தேதி ( வெள்ளிக்கிழமை) பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்திற்காக அரசு விடுமுறை அளிக்கப்படுதவதாக தமிழக அரசு அறிவித்தது.
மக்கள் வசதிக்காகவும், வெளியூர்களில் இருந்து தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்லும் மக்கள் தங்கள் குடும்பத்துடன் போதிய நேரத்தைச் செலவிட வேண்டும் என்பதற்காகவும் தமிழக அரசு ஜனவரி 17ம் தேதியையும் விடுமுறை நாளாகவும் அறிவித்துள்ளது.
இந்த நிலையில், புதுவையிலும், மக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாட ஏதுவாக,16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்களும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 6 நாட்கள் தொடர்ந்து விடுமுறை கிடைக்கும். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்ரவரி 1 மற்றும் 8 ஆகிய இரண்டு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.