தமிழகத்தில் நேற்று முதல் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் வினியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்பு ஜனவரி 13ஆம் தேதி வரை விநியோகம் செய்யப்படும் நிலையில் கடந்த 10-ம் தேதி மற்றும் இன்று ரேஷன் கடைகளின் விடுமுறை ரத்து செய்யப்பட்டு வழக்கம் போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
அதாவது பொங்கல் பரிசினை பெற ஏதுவாக ரேஷன் கடைகள் திறந்திருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இதன் காரணமாக தற்போது இந்த விடுமுறையை ஈடுகட்ட ஜனவரி 15 மற்றும் ஜனவரி 22 ஆகிய தேதிகளில் ரேஷன் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அன்றைய தினங்களில் ரேஷன் கடைகள் செயல்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.