கடல்சீற்றம்.. படகு கவிழ்ந்து பயங்கர விபத்து.. ஒரு மீனவர் பலி.. மற்றொருவரை தேடும் பணி தீவிரம்!
Dinamaalai January 11, 2025 12:48 AM

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம் போல் ஐந்து மீனவர்கள் ஒரு படகில் கடலுக்குச் சென்றிருந்தனர். இன்று (10.01.2025) மீன்பிடித்துவிட்டு கரை திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, மீனவர்கள் பழவேற்காடு கழிமுகப் பகுதிக்கு வந்து கொண்டிருந்தபோது, கடல் சீற்றமாக இருந்தது. இதனால், படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது.

அப்போது, படகில் இருந்த ஐந்து பேரும் கடலில் விழுந்து கரை ஒதுங்கினர். அவர்களில் மூன்று பேர் நீந்தி கரைக்கு வந்தனர். கரை திரும்பிய மீனவர்கள், மற்ற மீனவர்களான மோகன் மற்றும் செல்வம் ஆகியோர் நீரில் மூழ்கி இறந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து, கடலில் காணாமல் போன இருவரையும் தேடும் பணியில் மற்ற மீனவர்கள் ஈடுபட்டனர். இது குறித்து மீன்வளத்துறை மற்றும் காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

இந்த சூழ்நிலையில், காணாமல் போன மீனவர்களில் ஒருவரான மோகன் இறந்து கிடந்தார். அதே நேரத்தில், செல்வத்தை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பழவேரடு முகத்துவாரப் பகுதியில் படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழந்த சம்பவம் மீனவர்களிடையே மிகுந்த சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.