சத்தீஸ்கர் மாநிலத்தில் முங்கேலி மாவட்டத்தின் சர்கான் பகுதியில் உள்ள ஒரு உருக்கு ஆலையின் சிலோ நேற்று திடீரென இடிந்து விழுந்ததில் குறைந்தது 4 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர், மேலும் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. படுகாயம் அடைந்த ஒரு தொழிலாளி அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக முங்கேலி கலெக்டர் ராகுல்” குறைந்தது ஒன்பது பேர் உயிரிழந்திருக்கலாம், இருப்பினும் இந்த உயிரிழப்புகள் இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
முங்கேலியில் உள்ள சர்கானில் உள்ள இரும்பு தயாரிக்கும் தொழிற்சாலையின் சிலாப் அமைப்பு இடிந்து விழுந்ததால் தொழிலாளர்கள் அச்சமடைந்துள்ளனர். காயமடைந்த ஒரு தொழிலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காவல்துறை மற்றும் நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் உள்ளனர். மீட்பு பணி நடைபெற்று வருகிறது" என முங்கேலி கலெக்டர் தெரிவித்தார்.
ரிசர்வ் வங்கி கிளையில் காஷ்மீர் பிரிவினைவாதக் குழுவின் பணப் பரிமாற்றம் குறித்த பொதுநல வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. சர்கான் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ராம்போட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விபத்து நடந்தபோது ஆலையில் இரும்பு குழாய்கள் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் மீட்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.
இது குறித்து வெளியான தகவல்களின் படி பிலாஸ்பூர், பென்ட்ரா, ராய்கர் மற்றும் ஜான்ஜ்கிர்-சம்பா உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்து பேரிடர் மேலாண்மைக் குழுக்கள் மீட்புப் பணிகளில் உதவ அழைக்கப்பட்டுள்ளன. அப்பகுதி கிராம மக்கள், பொதுமக்கள் பலர் சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழப்பைக் கையாளும் வகையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து மாவட்ட நிர்வாகக் குழுவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேல், ஒரு சமூக ஊடகப் பதிவில், தொழிலாளர்களின் சோகமான மரணச் செய்தியைக் கேட்டதும் தனது வருத்தத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.