பாகூர் சித்தேரியில் மதுபானக் கடையில் ஏற்பட்ட மோதலில் தொழிலாளி ஒருவர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த முத்து என்பவர் சென்ட்ரிங் தொழிலாளியாக பணிபுரிகிறார்.
கடந்த 8 ஆம் தேதி மாலை, புதுச்சேரியின் எல்லையில் உள்ள பாகூர் சித்தேரி பகுதியில் உள்ள ஒரு மதுபானக் கடைக்கு மது அருந்தச் சென்றிருந்தார். அப்போது, முத்துவுக்கும் எதிரே அமர்ந்து மது அருந்தியவர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறு சண்டையாக மாறியது. இதைச் சுற்றி திரண்ட கும்பல், முத்துவை பாட்டில்கள் மற்றும் கற்களால் தாக்கியது. முகத்தில் காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்தார். முத்து உடனடியாக மீட்கப்பட்டு ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட மதுபானக் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளில் அந்த நபர்கள் முத்துவை கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகின்றன. இந்த சம்பவம் தொடர்பாக ஆனந்தராஜ், ராஜேஷ், ரஞ்சித் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதையடுத்து, முத்துவின் முத்துவின் மரணத்திற்கு நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.