அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த கட்டுக்கடங்காத காட்டுத் தீயால் ஒரு லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ள நிலையில் பலர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீயால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் எரிந்து சேதமான நிலையில் அந்த பகுதியில் ஏராளமான ஹாலிவுட் பிரபலங்கள் வசிக்கும் நிலையில் அவர்களுடைய கோடிக்கணக்கான சொத்துக்களும் எரிந்து நாசமானது.
இதற்கிடையில் இந்த காட்டுத் தீயால் வனவிலங்குகளும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காட்டுத்தீயில் சிக்கி நகரத்திற்கு ஓடி வந்த ஒரு குட்டி மான் பரிதவிப்போடு எங்கு செல்வது என தெரியாமல் அங்குமிங்கும் அலைமோதும் ஒரு வீடியோ காட்சி வெளியாகி கவலையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது தொடர்பான வீடியோஸ் சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் மத்தியில் வனவிலங்குகள் குறித்த கவலையை அதிகரிக்க செய்துள்ளது.