திராவிடர் கழக தலைவர் வீரமணி ஜனவரி 9ஆம் தேதி நேற்று சென்னையிலும், மதுரையிலும் கழக சமூக நீதியாளர்களை ஒருங்கிணைத்து அறவழியில் போராட்டம் நடத்தினார். இந்தப் போராட்டத்தில் நீதிபதிகள் நியமனம் குறித்து பேசினார். அதைத்தொடர்ந்து சீமானின் சர்ச்சைக்குரிய பேச்சுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசினார். இதுகுறித்து வீரமணி கூறியதாவது, பெரியாரை பற்றி பைத்தியக்காரர்கள் கூறுவதா? பெரியாரைப் பற்றி அறிய முதலில் பகுத்தறிவு இருக்க வேண்டும்.
பைத்தியக்காரர்கள் பகுத்தறிவு குறித்து பேசக்கூடாது. பைத்தியம் பிடித்தவர்களுக்கு வைத்தியம் தான் பார்க்க வேண்டும் அவர்களுக்கு பதிலளிக்க வேண்டிய கடமை கிடையாது. வெறி நாய் கடித்தால் மருத்துவம் தான் பார்க்க வேண்டும். வெறிநாய் உடன் போட்டியா போட முடியும். நாங்கள் பெரியாரிடம் படித்தவர்கள். பெரியாரைப் பற்றி பைத்தியக்காரன் சர்டிபிகேட் கொடுத்தால் செல்லுமா செல்லாது… தன்னை இருக்கிறோம் என காட்ட இவ்வாறெல்லாம் பேசி வருகிறார். என வீரமணி கூறியுள்ளார்.