ஈரோடு கிழக்கு தொகுதி எம் எல் ஏ ஈவெரா திருமகன் உடல் நல குறைவால் உயிரிழந்த நிலையில் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் வந்தது. அந்த தேர்தலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்ற நிலையில் அவர் கடந்த வருடம் உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். இதனால் அந்த தொகுதியில் மூன்றாவது முறையாக தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைத்தொடர்ந்து பிப்ரவரி 8ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்படும்.
இந்நிலையில் இடைத்தேர்தலில் ஏற்கனவே நாம் தமிழர் கட்சி போட்டியிடும் என்று சீமான் அறிவித்துவிட்ட நிலையில் தற்போது பிரேமலதா விஜயகாந்த் பற்றி பேசியுள்ளார். கடந்த விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தேமுதிக கட்சி போட்டியிடவில்லை. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்திடம் இது பற்றி கேட்டபோது இது தொடர்பாக ஆலோசனை நடத்தி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் அதிமுக மற்றும் திமுக ஆகிய கட்சிகளும் இன்னும் இடைத்தேர்தல் வேட்பாளர் யார் என்று அறிவிக்காத நிலையில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.