ஷாக் கொடுத்த விமான டிக்கெட்.... பயணிகள் கடும் அவதி!
Dinamaalai January 11, 2025 11:48 PM


தமிழகத்தில் பொங்கல் பண்டிகை  ஜனவரி 14ம் தேதி செவ்வாய்க்கிழமை விமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து சென்னை கோவை போன்ற பெருநகரங்களில் வசித்து வருபவர்கள் சொந்த ஊர் செல்ல தயாராகி வருகின்றனர். பேருந்து, ரயில்களில் டிக்கெட் கிடைக்காதவர்கள் விமானம் மூலம் செல்ல தயாராகி வருகின்றனர்.  

கடைசி நேரத்தில் விமான போக்குவரத்தை நாடுவதன்  காரணமாக சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து  மதுரை , திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர்,  சேலம், தூத்துக்குடி மற்றும் திருவனந்தபுரம் ஆகிய நகரங்களுக்கு செல்லும் பயணிகளின் கூட்டம் வழக்கத்தை விட நேற்று அதிகமாக இருந்தது.மேலும், சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து,  இந்த நகரங்களுக்கு செல்லும் விமான பயண கட்டணங்கள் பல மடங்கு அதிகரித்து இருப்பதாக  தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால், இந்த  கட்டண உயர்வையும்  பொருட்படுத்தாமல் விமான நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. அதன்படி  சென்னை – மதுரை விமான பயண கட்டணம் வழக்கமாக ரூ.3,367 ஆக இருந்த நிலையில் நேற்று மட்டும்  டிக்கெட்டின் விலை ரூ.17,262 ஆக அதிகரித்தது.  அதேபோல், சென்னை –  தூத்துக்குடிக்கு வழக்கமான   கட்டணம் ரூ.3,624 ஆகும். ஆனால், நேற்று கட்டணம் ரூ.13,639 ஆக அதிகரித்தது. மேலும், சென்னை – திருச்சிராப்பள்ளிக்கு வழக்கமான கட்டணம் ரூ.2,264 ஆக இருந்த நிலையில்  நேற்று கட்டணம் ரூ.11,369 ஆக அதிகரித்தது குறிப்பிடத்தக்கது

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.