இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் இந்திய அணி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த போட்டி மொத்தம் 8 தொடர்கள் கொண்ட நிலையில் முதல் 5 போட்டிகள் டி20 தொடராகவும், அடுத்த 3 போட்டிகள் ஒரு நாள் தொடராகவும் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற இருக்கிறது. இந்த போட்டிக்கு பிறகு சாம்பியன்ஸ் டிராபி தொடர் தொடங்கும். இதன் காரணமாக போட்டி மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவிய நிலையில் தற்போது இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இந்த தொடரில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் செயல்படுவார் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது. அதன்பிறகு சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அபிஷேக் ஷர்மா, திலக் வர்மா, ஹர்திக் பாண்டியா, ரிங்கு சிங், நிதீஷ்குமார், அக்சர்படேல், ஹர்சித் ராணா, அர்ஷ் தீப் சிங், முகமது சமி, வருண் சக்கரவர்த்தி, ரவி பிஷ்னோய், வாஷிங்டன் சுந்தர், மற்றும் துருவ் ஜூலை ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.