அப்போது மன்சூர் அலிகான் பல்வேறு நடிகர், நடிகைகள்பற்றிக் கூறிய கருத்து சர்ச்சையைக் கிளப்பி உள்ளது.
இந்தப் பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருவர், ‛‛நீங்கள் திரிஷா பற்றிப் பேசும்போது.” என்று கேள்வி கேட்க முயன்றார். அப்போது மன்சூர் அலிகான் உடனே குறுக்கிட்டார்.
அதன்பிறகு அவர், ‛‛ஹே… ஹே… நான் எங்கே பேசுனேன். கட் பண்ணி வைச்சி நாசம் பண்ணுனா… அதை மறக்க முடியலனு சொல்லற… அப்படினா தனியா போ… இன்னும் கொஞ்ச நாள்ல அவங்க அமைச்சர் ஆகிடுவாங்க.
அங்க போ” என்று கூறினார். ஆனால் எந்த அடிப்படையில் மன்சூர் அலிகான் இப்படி கூறினார்? விளையாட்டாகக் கூறினாரா? ஏதேனும் உள்நோக்கத்துடன் கூறினாரா? என்பது இன்னும் தெரியவில்லை. இது தற்போது விவாதத்தைக் கிளப்பி உள்ளது.
முன்னதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் லியோ. இந்தப் படத்தின் கதாநாயகியாகத் திரிஷா நடித்திருந்தார்.
இதில் நடிகர் மன்சூர் அலிகான் நடித்திருந்தார். இந்தத் திரைப்படம் வெளியான பிறகு நடிகர் மன்சூர் அலிகான் அளித்த பேட்டியில் நடிகை திரிஷா பற்றிக் கூறிய கருத்து சர்ச்சையானது.
பெட்ரூம் காட்சியுடன் திரிஷாவை அவர் ஒப்பிட்டுப் பேசியது சர்ச்சையைக் கிளப்பியது. மன்சூர் அலிகானுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதுதொடர்பாக மன்சூர் அலிகான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்பிறகு அவர் மன்னிப்பு கோரினார். அதன்பிறகு தான் இந்தப் பிரச்சனை முடிவுக்கு வந்த நிலையில் தற்போது திரிஷா கொஞ்சம் நாளில் அமைச்சராகி விடுவார் என்று மன்சூர் அலிகான் கூறி பரபரப்பை பற்றவைத்துள்ளார்.
அதேபோல் இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் தனுஷ் – நயன்தாரா மோதல்பற்றி மன்சூர் அலிகான் கருத்து தெரிவித்தார். இதுதொடர்பாக அவர், ‛‛நயன்தாரா கேரளாவிலிருந்து வந்துள்ளார்.
சக நடிகை, கதாநாயகி… அவரது படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார். தனுஷ் பெரிய நடிகராக ஹாலிவுட் வரை சென்றுவிட்டார். இதெல்லாம் பெருசு பண்ணலாமா?. ரூ10 கோடி என்னமா? வைச்சிக்கம்மா என்று சொல்ல வேண்டும்.
ஒரு செகன்ட் வருவதற்கு எல்லாம் காசு கொடு என்று கேட்டால் நம் தமிழனுக்கு என்ன மரியாதை இருக்கு. தனுசு எல்லாம் இதைப் பண்ணக் கூடாது. நயன்தாரா கல்யாண வீடியோ எதோ எடுக்குது. படத்தில் வராத ஒரு காட்சியைப் பயன்படுத்தி இருக்கிறாங்க… இதுக்கு ஒரு பிரஸ்மீட். நயன்தாராவுக்கு ஒரு சப்போர்ட்… யப்பா யப்பா” என்று கூறினார்.