Bigg Boss Tamil Season 8 : 'என்ன தான் முத்து கூட கருத்து வேறுபாடு இருந்தாலும்'.. பெருந்தன்மையுடன் சவுந்தர்யா சொன்ன வார்த்தை..
Tamil Minutes January 12, 2025 02:48 AM

Soundarya about Muthu : பிக் பாஸ் வீடு 100வது நாளை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்களில் எட்டு பேர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக மீண்டும் என்ட்ரி கொடுத்திருந்தனர். அவர்கள் வந்த பின்னர் வீட்டுக்குள் சுவாரஸ்யமாக இருக்கும் என பார்த்தால் சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கும் போட்டியாளர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தி அவர்களள் ஃபைனலை நோக்கி நகர்வதற்கான வாய்ப்புகளையும் தகர்த்தெறிந்து வருகின்றனர்.

வர்ஷினி, சாச்சனா என பலரும் தெரிவித்த கருத்தால் மனமுடைந்து போன சௌந்தர்யா, இத்தனை நாட்கள் நான் இருந்த பிறகும் இவர்கள் ஏன் என்னை இப்படி எல்லாம் பேசுகிறார்கள் என மிகுந்த வேதனையில் தெரிவித்திருந்தார். பல மணி நேரமாக கண்ணீர் விட்டுக் கொண்டிருந்த சௌந்தர்யாவை அழைத்து ஆறுதல் சொல்லிய பிக் பாஸ் அவரை சிறந்த முறையில் தேற்றி அனுப்பி இருந்தது.

சவுந்தர்யா மீது காண்டு

இதன் பின்னர் எப்போதும் போல ஆடிவரும் சவுந்தர்யா மீது விமர்சனங்கள் இருந்து தான் வருகிறது. 95 நாட்கள் ஆனாலும் டாஸ்க் என வரும் போது சலிப்புடன் ஆடிவரும் சௌந்தர்யா, சிறப்பான ஒரு போட்டியாளராக இல்லை என்ற போதிலும் கேமராவை பார்த்து ஏதாவது செய்து ரசிகர்களின் வாக்கை வாங்கி விடுவதாக சுனிதா, வர்ஷினி உள்ளிட்ட பலரும் தெரிவித்து வந்தனர்.

ஆனால் அதே நேரத்தில் அவர் சிறப்பாக ஆடி வருவதாக அவரது ஆதரவாளர்களும் சிலர் தகுந்த ஆதாரங்களுடன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். இதற்கிடையே சௌந்தர்யாவும், முத்துவும் அடிக்கடி கருத்து வேறுபாடு காரணமாக மோதிக் கொள்வதும் பிக் பாஸ் வீட்டிற்குள் தொடர்ந்து நடந்து வந்தது.

முத்து மேல வந்த அக்கறை

அப்படி இருக்கையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக முத்துக்குமரன் பற்றி பேசியிருந்த சௌந்தர்யா, ‘முத்து டைட்டில் வின்னர் ஆனால் எனக்கு அதிகம் சந்தோஷம் தான். ஏனென்றால் அதற்கு தகுதியான ஆள்தான் அவர்’ என்றும் பெருமையாக குறிப்பிட்டிருந்தார். அப்படி ஒரு சூழலில் சமீபத்தில் முத்துக்குமரன் பற்றி ஜாக்குலினிடம் பேசும் சௌந்தர்யா, “என்ன தான் நானும் முத்துவும் கருத்து வேறுபாடின் காரணமாக மோதி கொண்டாலும் எனக்கும் அவனுக்கும் இந்த வீட்டிற்குள்ளே ஒரு சிறந்த பந்தம் இருந்து வருகிறது.

ஆனால் அதனை இரண்டு பேரும் வெளிக்காட்டுவதில்லை. எங்களுக்குள் இருக்கும் சிறிய நட்பை நாங்கள் இரண்டு பேரும் காட்டிக் கொள்ளவே இல்லை என்றே நினைக்கிறேன். முத்துவிடம் கேட்டால் என்ன சொல்வார் என தெரியாது. ஆனால் நான் அதை அதிகம் வெளிப்படுத்தியதில்லை. இருந்தாலும் பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டி என வரும் போது அப்படி இருக்க வேண்டும்” என சௌந்தர்யா தெரிவித்துள்ளார்.

திடீரென முத்துக்குமரன் பற்றி அக்கறையுடன் சவுந்தர்யா பேசி வருவதையும் ரசிகர்கள் மிக நுட்பமாக கவனித்தும் வருகின்றனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.