தான் நடித்த படங்களிலும் கார் ரேஸிங்கை முன்னிறுத்தியிருப்பார். ரீல் லைஃபில் மட்டுமல்லாமல் ரியல் லைஃபிலும் அவர் கார் ரேஸிங்கில் கலந்து கொண்டு சாகசங்களை செய்து வருகிறார். இதனால் விபத்தில் சிக்கி அவருக்கு பல முறை முதுகுதண்டில் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளன. அது போல் கால் தண்டு வடத்திலும் சிறிய ஆபரேஷன்கள் நடத்தப்பட்டன.
இந்த நிலையில் 15 ஆண்டுகள் கழித்து துபாயில் நடக்கும் 24 மணி நேர கார் ரேஸில் நடிகர் அஜித்தும் அவருடைய குழுவினரும் கலந்து கொண்டுள்ளனர். இதற்காக அவர்கள் தீவிர பயிற்சியை எடுத்தனர். இதற்காக பல கோடி மதிப்பிலான 24 எச் சீரிஸ் வகை காரை அஜித் வாங்கினார். 901 என்பது அஜித் குமார் இயக்கும் காரின் எண் ஆகும்.
இந்த நிலையில், அஜித் துபாயில் பந்தய களத்தில் பயிற்சியில் ஈடுபட்டபோது நூலிழையில் உயிர் தப்பினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
விபத்திற்கு பிறகும் அஜித் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபட்டு வந்தார். இந்த சூழலில், அஜித் அணியின் உரிமையாளராக மட்டுமே தொடர்வார் என்றும், அவர் பந்தய வீரராக களமிறங்க மாட்டார் என்றும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. விபத்திற்கு பிறகு அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்தின் இந்த அறிவிப்பு அவரது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தினாலும், அஜித் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர். ஏனென்றால் அஜித் சிறு வயது முதலே கார் மற்றும் பைக் பந்தயங்களில் பலமுறை பங்கேற்றுள்ளார். அந்த பந்தயங்களின்போது அவர் பல முறை விபத்திலும் சிக்கியுள்ளார். இதனால், அவரது உடல்நிலை மிக மோசமாக பாதிக்கப்பட்டும் உள்ளது.
இந்த சூழலில், தற்போது மீண்டும் அஜித் கார் பந்தயத்தில் ஈடுபட்டிருப்பது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும், விபத்தில் சிக்கிய அஜித்தின் வீடியோ ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. 53 வயதான அஜித்தின் உடல்நிலையை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.