தமிழக அரசின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இலவச வேட்டி சேலைகள் ரேஷன் கடைகள் மூலமாக வழங்கப்பட்டது. அதாவது வருடம் தோறும் ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு போன்றவைகள் வழங்கப்பட்டது. அதோடு இலவச வேஷ்டி சேலையும் வழங்கப்பட்டது. இந்நிலையில் மாளவிகா என்ற பெண் தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தமிழக அரசின் நிலை விலையில்லா சேலையை அணிந்து கொண்டு ஒரு எக்ஸ் பதிவை போட்டுள்ளார்.
அந்த பதிவில் தமிழக அரசின் நிலையில்லா பொங்கல் சேலையில் விலைமதிப்பில்லா புன்னகையுடன் உங்கள் மாளவிகா. பொங்கல் பண்டிகை ஒவ்வொருவரின் மனதில் மகிழ்ச்சியையும் உடலில் உற்சாகத்தையும் கொண்டு வரட்டும் என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை தன்னுடைய x பக்கத்தில் பகிர்ந்த முதல்வர் ஸ்டாலின் போக்கும் புன்னகை ஒவ்வொன்றிலும் மனம் நிறைகிறேன் என்று பதிவிட்டுள்ளார். மேலும் மாளவிகா என்ற பெண் குடியரசு தலைவரிடம் நாரி சக்தி புரஸ்கார் என்ற விருதை பெற்றுள்ளார். மேலும் குண்டுவெடிப்பில் தன்னுடைய இரு கைகளையும் இழந்த மாளவிகா சமூக சேவைகள் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.