வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்கள்
Top Tamil News January 16, 2025 08:48 PM

கர்நாடகாவில் வங்கி ஊழியரை துப்பாக்கியால் சுட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர். 

கர்நாடகா மாநிலம் பீதர் நகரில் ஏடிஎம் இயந்திரத்தில் நிரப்ப பணம் எடுத்து சென்ற வங்கி ஊழியர்கள் மீது கொள்ளையர்கள் பட்டப்பகலில் துப்பாக்கிச்சூடு நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாகனத்தில் இருந்து பணம் இறக்கி கொண்டிருந்தவர்கள் மீது இருசக்கர வாகனத்தில் வந்த கொள்ளையர்கள் 2 பேர் துப்பாக்கிச்சூடு நடத்தி பணப்பெட்டியை கொள்ளையடித்து சென்றனர். 

கொள்ளையர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூட்டில் பலத்த காயமடைந்த மற்றொரு ஊழியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  கொள்ளையர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் பீதர் போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.  இருசக்கரத்தில் வந்த மர்ம நபர்கள், பணப்பெட்டியை உடைத்து, கட்டு கட்டாக பணத்தை எடுத்துச் செல்லும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.