விருத்தாச்சலம் அருகே அதிமுக பிரமுகர் எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே எம். வீரட்டிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்த செல்வராஜ் மகன் கதிர்காமன் வயது (43). நேற்று மாலை சுமார் ஐந்து மணி அளவில் கதிர்காமன் மற்றும் பாலகிருஷ்ணன், பிரபாகரன் ஆகிய நண்பர்களுடன் சேர்ந்து அருகே உள்ள முந்திரி தோப்பில் மது அறிந்தி கொண்டிருந்ததாகவும்கூறப்படுகிறது,
இந்த நிலையில் நேற்று இரவு வெகு நேரம் ஆகியும் கதிர்காமன் வீட்டிற்கு வராததால் இன்று காலை கதிர்காமன் மனைவி மற்றும் குடும்பத்தினர் அக்கம் பக்கத்தினர் தேடி உள்ளனர். பின்னர் வீட்டின் அருகே உள்ள முந்திரி தோப்பில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் இருப்பதை உறுதி செய்தனர். உடனே அங்கு சென்று பார்த்த பொழுது கதிர்காமன் பாதி எரிந்த நிலையில் இருந்துள்ளார்.
இதுகுறித்து ஊமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஊமங்கலம் போலீசார் கதிர்காமன் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் ஊமங்கலம் போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கதிர்காமனுடன் மது அருந்திய பிரபாகரனை பிடித்து போலீசார் விசாரணை செய்ததில் விசாரணையில் கதிர்காமன், பாலகிருஷ்ணன், நாங்கள் மூன்று பேரும் மது அருந்தினோம், அப்பொழுது கதிர்காமனுக்கும், பாலகிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டது, இந்த நிலையில் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன் இன்று பார்க்கும் பொழுது கதிர்காமன் எரிந்த நிலையில் இருந்துள்ளார் என கூறினார், பின்னர் போலீசார் மற்றொரு நபரான ராணுவ வீரர் பாலகிருஷ்ணனை தேடி வருகின்றனர்.