அந்தக் குழந்தைகளின் எடை அதிகரிக்கவும் டாக்டர்கள் சிகிச்சை அளிப்பார்கள்.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்ட சஷிஷா என்ற பெண்ணுக்கு 23 வாரத்தில் ஆண் குழந்தை பிறந்தது. அதன் எடை 350 கிராம் மட்டுமே இருந்தது.
இதையடுத்து அந்த ஆஸ்பத்திரியின் பச்சிளம் குழந்தைகள் மருத்துவ நிபுணர் டாக்டர் ரோஜோ ஜாய் தலைமையிலான டாக்டர்கள் குழுவினர் அந்தக் குழந்தையைத் தீவிர கண்காணிப்பு பிரிவில் வைத்துத் தொடர்ந்து 100 நாட்கள் வைத்துச் சிகிச்சை அளித்தனர்.
தற்போது அந்தக் குழந்தை நலமுடன் இருப்பதாகவும், அதற்கு நோவா என்று பெயர் வைத்துள்ளதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.
இதுதொடர்பாக டாக்டர் ரோஜோ ஜாய் கூறுகையில், எந்தவொரு பிறந்த குழந்தைக்கும், உயிர்வாழ்வதற்கு பொதுவாகத் தாயின் வயிற்றில் குறைந்தது 24 வாரங்கள் வளர்ச்சி தேவைப்படுகிறது.
இருப்பினும், ‘நோவாவின் விஷயத்தில், குழந்தை உயிர்வாழ்வதற்குத் தேவையான குறைந்தபட்ச வளர்ச்சியை எட்டுவதற்கு முன்பே, 23 வாரங்களில் பிறந்தது.