ஒடிசா மாநிலத்தில் உள்ள தியோகார் மாவட்டத்தில் குந்தெய்கோலா வனப்பகுதி அமைந்துள்ளது. இந்த வனப்பகுதியில் இருந்து வெளியேறிய இரண்டு காட்டு யானைகள் சங்காபாஸி கிராமத்திற்குள் நுழைந்தது. இந்த நிலையில் குனி பஹ்ரா(50) என்ற பெண்ணின் வீட்டிற்கு பின்னால் இருந்த சோள தோட்டத்தை யானைகள் நாசம் செய்த போது கால்நடைகள் மிரண்டு சத்தம் போட்டது.
இதனால் வீட்டிற்கு பின்னால் கட்டப்பட்டிருந்த மாட்டை காப்பாற்றுவதற்காக குனி பஹ்ரா சென்றார். அப்போது ஒரு யானை அவரை பலமாக தாக்கியது. இதனால் படுகாயம் அடைந்த பெண்ணை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். அந்த யானைகளுக்கு மயக்க மருந்து செலுத்தி வேறு ஒரு வனப்பகுதிக்குள் விட வேண்டும் என கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் வனத்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.