ஆண்கள் முட்டை சாப்பிட்டால் என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News January 18, 2025 09:48 AM

பொதுவாக பச்சை முட்டையின் வெள்ளை கருவில் உள்ள சில கிருமிகள் மூலம் டைபாய்டு ஜுரம் வரும் ,அதனால் அவித்து சாப்பிடுவதே சிறந்தது .ஒரு முட்டையின் மூலம் 60 கலோரிகள் நமக்கு கிடைக்கின்றன.அதனுடன் பால் சேர்த்து சாப்பிடும்போது நமக்கு 150 கலோரிகள் சத்து கிடைக்கிறது
1.ஒரு கோழி முட்டையில் ப்ரோடீன், கால்சியம், மெக்னீசியம், இரும்புச்சத்து, செலினியம், வைட்டமின் டி, ஒமேகா-3 கொழுப்புகள் போன்ற பல்வேறு சத்துக்கள் நிறைந்துள்ளது.
2.தினமும் ஒரு முட்டையினை உண்டு வந்தால் உங்களுக்கு அந்த நாளைக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து உங்களின் ஆரோக்கியம் சிறக்கும் .

3.ஒரு முட்டையில் 7 முதல் 7.5 கிராம் அளவுக்கு புரதச்சத்து நிறைந்துள்ளது. புரதசத்து உங்கள் உடலின் வளர்ச்சி மற்றும் இயக்கத்திற்கு முக்கிய தேவையாக அமைகின்றது.
4.மேலும் உங்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்திற்கு புரதச்சத்து மிக மிக முக்கியம்.
5.எனவே 40 வயதுக்குட்பட்டோர் ஒரு நாளைக்கு 2 முட்டையினையும் .அதற்கு மேல் வயதுள்ளோர் வாரம் இரண்டு முட்டையினை  உண்டு வரவும்.
6.இதய நோயாளிகள் மாதம் இரு முட்டை உண்ணலாம்  
7.. தினமும் ஒரு முட்டையினை உண்டு வந்தால் உங்களின் பாலுணர்ச்சி அதிகரிக்கும். மேலும் ஆண்களின் விந்தணு உற்பத்திக்கு தேவையான புரதத்தை முட்டை மூலம் நாம் அடையலாம்

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.