பொதுவாக நெய் நமக்கு பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது இதை கொழுப்பு என்று சிலர் ஒதுக்கி விடுவதுண்டு .ஆனால் தினம் நெய் உணவில் சேர்த்து கொள்வதால் உண்டாகும் நன்மை குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.கண் பார்வை தெளிவாக இருக்கவும், எலும்புகள் வலிமை பெறவும் வைட்டமின் ஈ சத்து அதிகம் தேவைப்படுகிறது. நெய்யில் இந்த இரண்டு வைட்டமின் சத்துக்களும் அதிகம் நிறைந்திருக்கிறது.
2.எனவே தினந்தோறும் உணவில் சிறிது நெய் சேர்த்து சாப்பிடுவதால் மேற்கூறிய இரண்டு சக்திகளும் கிடைக்கப் பெற்று உடல் ஆரோக்கிய நிலை மேம்படுகிறது.
3.இந்த வேதிப்பொருட்களுக்கு வைரஸ் கிருமிகளை எதிர்த்து செயல்புரியும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் அதிகம் நிறைந்ததாக இருக்கிறது.
4.இவை உடலை பாதிக்கும் எத்தகைய வைரஸ் கிருமிகளையும் எதிர்த்து செயல் புரிந்து உடல் நோய்வாய்ப்படாமல் தடுக்கிறது.
5.மனிதர்களின் வயிற்றின் குடற்சுவற்றில் உணவு செரிமானம் ஆவதற்கு உதவும் நன்மை செய்யும் பாக்டீரியா நுண்ணுயிர்கள், உணவில் இருக்கும் நார்ச்சத்தை பியூடைரிக் அமிலமாக மாற்றிக் கொள்கிறது. 6.இந்த நுண்ணுயிரிகளுக்கு வலுசேர்க்க பியூடைரிக் அமிலம் நிறைந்த நெய்யை அடிக்கடி சாப்பிடுவதால் உணவு செரிமானம் ஆவதில் குறைபாடுகள் நீங்கி நன்மைகள் உண்டாகும்..