Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இன்று நடக்க இருக்கும் எபிசோடுகளின் தொகுப்புகள்.
மனைவிகளிடம் சண்டை போட்டுவிட்டு முத்து, மனோஜ் மற்றும் ரவி மூவரும் மாடியில் வந்து படுத்திருக்கின்றனர். கல்யாணம் ஆனதும் பொண்ணுங்க எல்லாம் வார்டன மாறிடறாங்க என கலாய்த்து கொண்டிருக்கின்றனர். இதற்கு முத்து பொண்ணுங்களா இருக்க வரையும் தான் என் பொறுப்பு.
பொண்டாட்டிகளா மாறிட்டா அதுக்கு நான் பொறுப்பு இல்லைன்னு கடவுளே முடிவு செஞ்சுட்டாரு என்கிறார். சும்மா இருக்காத மனோஜ் இது கால் செய்து ரோகிணியிடம் சொல்லி முத்து தானே இப்படி சொன்னாரு போன வை என திட்டி விட்டு வைக்கிறார்.
காலையில் மூவரும் சாப்பிடாமல் மனைவிகள் சாப்பிடாமல் நகர்ந்து சென்று விடுகின்றனர். ரவி எங்க மேல எந்த தப்பும் இல்லப்பா என பேச தொடங்க அண்ணாமலை நான் இங்க சாப்பிட வந்தேன். உங்க குடும்ப சண்டையை நீங்களே பாத்துக்கோங்க என சென்று விடுகிறார்.
விஜயாவை அழைத்து நீனும் எதுவும் கேட்கக்கூடாது என்று கூறி விடுகிறார். மனோஜ் விஜயாவை அழைக்க ஏன் அவர் என் கூட பேசாம மாடிக்கு வரதுக்கா செல்கிறார். முத்து சென்று பாட்டியை அழைத்து வர எல்லோரிடமும் நலம் விசாரிக்கிறார்.
மனோஜ் மற்றும் ரோகிணியை பார்த்து முகம் மாறினாலும் ஏதும் விசேஷம் இருக்கா என சமாளித்து விடுகிறார். பின்னர் எல்லோரிடமும் பேசிக் கொண்டிருக்கும்போது ரவி தன்னுடைய முதலாளி நீத்துவை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார்.
நாளை தங்கள் கம்பெனி சார்பாக பொங்கல் போட்டி ஏற்பாடு செய்திருப்பதாகவும் அதற்கு எல்லோரும் வரவேண்டும் என அழைப்பு விடுத்து சொல்கிறார். அடுத்த நாள் காலை எல்லோரும் விழாவில் இருக்க முதல் போட்டியாக பெண்களுக்கு தண்ணீர் குடம் சுமக்கும் போட்டி நடைபெறுகிறது.
இதில் பெண்கள் எல்லோரும் தலையில் குடத்தை வைத்துக் கொண்டு நடந்து வர ஸ்ருதி மற்றும் மத்த பெண்களின் குடங்கள் விழுந்து விடுகிறது. இதில் மீனா மற்றும் ரோகிணி இருவரும் பொறுமையாக நடந்து சென்று கொண்டிருக்கின்றனர். விஜயா ரோகிணிக்கு சப்போர்ட் செய்து கொண்டு இருக்கிறார்.