தனுஷின் புதிய படம்…. திடீரென மாற்றப்பட்ட ரிலீஸ் தேதி…. அஜித் தான் காரணமா….?
SeithiSolai Tamil January 18, 2025 03:48 PM

தமிழ் திரையுலகின் பிரபல நட்சத்திரம் தனுஷ். பா பாண்டி, ராயன் படத்தை தொடர்ந்து தனுசு இயக்கிய படம் நிலவுக்கு என்மேல் என்னடி கோபம். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் இசை அமைத்துள்ளார். படத்திலிருந்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருந்தது.

அதோடு இந்த படம் பிப்ரவரி மாதம் ஏழாம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த படம் பிப்ரவரி 21 ஆம் தேதி வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது. 7ஆம் தேதி அஜித் நடிப்பில் விடா முயற்சி திரைப்படம் வெளியாவதால் தான் இந்த மாற்றம் என்று பேசப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.