சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை நிலவரத்தின் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் புத்தாண்டு தொடக்கம் முதலே தங்கத்தின் விலை அதிகரித்து வருகிறது.
இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ59000ஐ தொட்டது. இந்தியாவில் தங்கத்தின் மீதான நுகர்வு, மத்திய-மாநில அரசின் இறக்குமதி வரிகள் போன்றவை காரணமாக விலை உச்சத்தில் இருந்து வருகிறது. சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தங்கத்தின் மீதான நுகர்வு, நாடுகளுக்கு இடையேயான போர், பதற்ற சூழ்நிலை காரணமாகவும், தங்கத்தின் விலை என்பது கடுமையாக உயர்ந்து வருவதாக பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.
நடுத்தர வர்க்கத்தை பொறுத்தவரையில் தங்கம் என்பது எதிர்கால சேமிப்பாக பார்க்கப்படுகிறது. இதனால் தங்கத்தின் விலை எப்படி இருந்தாலும், மக்கள் அதனை வாங்கி வருகின்றனர். இந்நிலையில், இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ15 குறைந்து ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ7435க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.59,540 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வெள்ளியின் விலை மாற்றம் இன்றி ஒரு கிராம் ரூ104க்கும், ஒரு கிலோ பார்வெள்ளி ரூ.1,04,000 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
!