பிரபல தயாரிப்பாளர் டி.எம் ஜெயமுருகன். இவர் கடந்த 1997 ஆம் ஆண்டு முரளி நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன ரோஜா மலரே என்ற திரைப்படத்தை இயக்கவும் செய்துள்ளார். இவர் முதன்முதலாக கடந்த 1995ஆம் ஆண்டு மன்சூர் அலிகானை ஹீரோவாக வைத்து சிந்துபாத் என்ற படத்தை தயாரித்தவர். இவர் அடடா என்ன அழகு, தீ இவன் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். இந்த இரு படங்களுக்கும் அவர்தான் இசையமைத்தார்.
அதோடு படங்களில் நடித்தும் இருக்கிறார். இவர் தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் மற்றும் இசையமைப்பாளர் என பன்முக திறமைகளை கொண்டவர். இவர் மாரடைப்பின் காரணமாக தற்போது உயிரிழந்து விட்டார். அவர் நேற்று உயிரிழந்த நிலையில் அவருடைய மறைவுக்கு திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். மேலும் அவருடைய இறுதிச் சடங்கு என்று திருப்பூரில் உள்ள தென்னம்பாளையம் பகுதியில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற உள்ளது.