பொதுவாக அந்த காலத்து தாத்தாக்கள் இன்றும் ஓடி ஆடி வேலை செய்கின்றனர் .இவர்கள் இப்படியிருக்க காரணம் அவர்கள் கடை பிடித்த உணவு முறையே ஆகும் .இந்த உணவு முறை பற்றி நாம் இப்பதிவில் காணலாம்
1.சிறுதானியங்களே நமக்கு அதிக நன்மை செய்பவையாகும். கம்பு, வரகு, சாமை, தினை, குதிரைவாலி, கேழ்வரகு, சோளம், கொள்ளு ஆகியவை சிறுதானியங்களாகும்.
2.இதில் கரையும் மற்றும் கரையாத நார்ச்சத்து இவற்றில் அதிகம் காணப்படுகிறது.
3.செரிமான மண்டலத்திலுள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு இவை உதவுகின்றன.
4.ஆகவே மலச்சிக்கல், பெருங்குடல் புற்றுநோய் இவற்றை நம் தலைமுறைக்கே வராமல் தடுப்பதில் இவை முக்கிய பங்காற்றுகிறது .
5.மஞ்சள், இலவங்க பட்டை, வெந்தயம், கறுப்பு மிளகு போன்ற மசாலா பொருள்களும் உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை செய்யக்கூடியவை.
6.வெள்ளைப் பூண்டு நெடி மிக்கதாக இருந்தாலும், இதிலுள்ள கந்தகம் (சல்பர்) நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது.
7.தயிரில் அதிக புரதம் உள்ளது. வயிற்றில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்களுக்கு தயிர் உதவுகிறது. இது மன அழுத்தத்தை குறைத்து ஆபத்தான நோய்கள் அண்டாமல் காக்கிறது..