'குட் நைட்', 'லவ்வர்' படங்களைத் தொடர்ந்து நடிகர் மணிகண்டன் 'குடும்பஸ்தன்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார்.
இப்படத்தை நக்கலைட்ஸ் புகழ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி இருக்கிறார். இதில் குரு சோமசுந்தரம், சன்வி மேகனா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 24 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட மணிகண்டனிடம் அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது.
குடும்பஸ்தன் படக்குழுஅதற்கு பதிலளித்த அவர், “அஜித் சார் பல தலைமுறைகளுக்கு இன்ஸ்பிரேஷன். அவர் என்றுமே தன்னுடைய passion- ஐ கைவிட்டதில்லை. அதற்கான பலன்கள் கிடைப்பதைப் பார்க்கையில் இன்னும் உத்வேகமாக உள்ளது. நம் இலக்குகளை அடையக் கடினமாக உழைத்தால் ஒருநாள் நமக்கு வெற்றி கிடைக்கும் என்பதற்கு அவர் உதாரணமாக உள்ளார்” என்று கூறியிருக்கிறார். மணிகண்டன் அஜித் குறித்து பேசியது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.