பொதுவாக புதினாவின் வாசனையால் நம் உணவுல சேர்த்து வருகிறோம் .இதில் உள்ள பலவிதமான சத்துக்கள் நம் மூளையின் செயல்பாட்டை ஊக்குவிக்கிறது .இந்த புதினாவின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1. புதினாவை வெறும் வாயில் மென்று தின்றால் நம் உடலில் வாயு தொல்லை ஏற்படாமல் பாதுகாக்கும் .
2.மேலும் இது அமிலத்தன்மையை சீராக்கி ,வயிறு உப்பிசம் பிரச்சினையை சரிப்படுத்தி ,செரிமான சக்தியை மேம்படுத்துகிறது .
3.மேலும் சுவாச கோளாறுகளை இந்த புதினா சரிப்படுத்தி ,ஆஸ்த்மா நம்மை அட்டாக் பண்ணாமல் பாதுகாக்கிறது
4.இவ்ளோ மருத்துவ குணமுள்ள புதினாவை புதினா சட்னி, புதினா ஜூஸ், புதினா டீ, புதினா கசாயம், புதினா சூப் என எவ்வாறு வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
5.புதினாவை தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்க விட வேண்டும். இதில் எலுமிச்சை ஜுஸ் கலந்து குடித்து வந்தால் பித்தம் குறைந்துநம் உடல் முழு ஆரோக்கியம் பெரும் .
6.புதினா அதிக அளவு கொழுப்பை குறைக்கிறது. எனவே, உடல் எடையை குறைப்பதற்கு புதினா பெரிதும் உதவுவதால் இதை துவையலாக செய்து சாப்பிடலாம்
7.சில கற்பிணி பெண்களுக்கு குமட்டல் மற்றும் வாந்தி இருந்து அவர்களை பாடாய் படுத்தி எடுக்கும் .அந்த நேரத்தில் புதினாவை யூஸ் பண்ணால் நல்ல பலன் கிடைக்கும்