பாகிஸ்தான் முதல் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்திய சீனா..!
Seithipunal Tamil January 18, 2025 09:48 AM

பாகிஸ்தானுக்கு சொந்தமான எலக்ட்ரோ-ஆப்டிகல் (EO-1) என்ற செயற்கைக்கோளை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது. பாகிஸ்தான் நாட்டில் தயாரான இந்த செயற்கை கோளுக்கு  PRSC-EO-1 எனப்பெயரிடப்பட்டுள்ளது.  

இந்த செயற்கைக்கோள், சீனாவில் உள்ள ஜியுகுவான் செயற்கைக்கோள் ஏவும் மையத்தில் இருந்து செலுத்தப்பட்டு, விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த செயற்கைக்கோள் பாகிஸ்தானின் இயற்கை வளங்களை கண்காணித்து நிர்வகிக்கும் திறனை அதிகரிக்கவும், பேரிடர்கள் குறித்து முன்னதாகவே அறிந்து கொள்வதற்கும், நகர்ப்புற திட்டமிடல் மற்றும் விவசாய மேம்பாட்டை மேம்படுத்தவும் உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.