இருதய நோய் மற்றும் இருதய கோளாறு வராமல் தடுக்க உதவும் இந்த எண்ணெய்
Top Tamil News January 18, 2025 10:48 AM

மீன் எண்ணெய் என்பது மீன்களில் இருந்து எடுக்கப்படும் ஒரு வகை நல்ல கொழுப்புகள் நிறைந்த எண்ணெய் ஆகும்..அதுவும் அட்லாண்டிக் பகுதியில் உள்ள பண்ணா மீன் வகையிடமிருந்து எடுக்கப்படும் மீன் எண்ணெய் பல்வேறு ஆரோக்கிய குணத்தை கொண்டது .இந்த மீன் எண்ணெயின் ஆரோக்கிய நன்மைகள் குறித்து நாம் இப்பதிவில் காணலாம்
1.இந்த மீன் எண்ணெய் மாத்திரை நம் எலும்புகளுக்கு உறுதி சேர்க்கிறது .
2.மேலும் தவறான உணவு பழக்கத்தால் உண்டாகும் அல்சர் என்று வயிற்று புண்ணை குணமாக்கும் .
3.மேலும் செரோட்டன் மூளையில் குறைவதால் உண்டாகும் மன அழுத்தம் படபடப்பு போன்ற பிரச்சினைகளை சரி செய்யும் .மேலும் மூளை வளர்ச்சிக்கும் இது பயன் படுகிறது


4.மீன் எண்ணெய்  உங்களுக்கு மாலைக்கண், பார்வை குறைபாடு மற்றும் வயதாவதால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றிலில் இருந்து காக்க உதவும்.
5.மீன் எண்ணைய்  உங்களின் இதய இரத்த குழாயில் கொழுப்பை தங்குவதை தடுக்க உதவும்.
6.தினமும் மீன் எண்ணெய் எடுத்துக்கொள்பவர்களுக்கு இருதய நோய் மற்றும் இருதய கோளாறு போன்ற பிரச்சினைகள் வரவே வராது என்று பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
7.மீன் எண்ணையில் அதிக அளவு நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளதால்  உடல் எடையினை குறைக்க உதவும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.