நடிகர் மணிகண்டன்: தமிழ் சினிமாவில் இயக்குனர், கதாசிரியர், வசனகர்த்தா, நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் நடிகர் மணிகண்டன். தமிழ் சினிமாவில் தற்போது வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக இருந்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான குட் நைட், லவ்வர் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதிலும் இவரின் மிமிக்ரி திறமைக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் இந்தியா பாகிஸ்தான் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமான இவர் அதன் பிறகு காதலும் கடந்து போகும், எட்டு தோட்டாக்கள், விக்ரம் வேதா, காலா, சில்லு கருப்பட்டி, சில நேரங்களில் சில மனிதர்கள் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கின்றார். இத்தனை திரைப்படங்களில் நடித்திருந்த போதிலும் பெரிய அளவுக்கு வரவேற்பை பெறாத மணிகண்டன் ஜெய் பீம் திரைப்படத்தின் மூலமாக மிகப்பெரிய பாராட்டைப் பெற்றார்.
ராஜாக்கண்ணு என்கின்ற கதாபாத்திரத்தில் மிகச் சிறப்பாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்றார் மணிகண்டன். இந்த திரைப்படத்திற்கு பிறகு குட் நைட் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதனைத் தொடர்ந்து கடந்த வருடம் வெளியான லவ்வர் என்கின்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
தொடர்ந்து சிறிய பட்ஜெட் படங்களில் நடித்தாலும் பெரிய அளவு வெற்றியை கொடுத்து வரும் மணிகண்டனுக்கு தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் அறிமுக இயக்குனர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் தற்போது குடும்பஸ்தன் என்கின்ற திரைப்படத்தில் நடித்திருக்கின்றார்.
இந்த திரைப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி இருக்கின்றது. ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த குடும்பத்தில் குடும்பஸ்தன் எப்படி உருவாகின்றான். அவன் என்னென்ன பிரச்சனைகளை எல்லாம் சந்திக்கின்றான் என்பதை படமாக எடுத்திருக்கிறார்கள். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் மணிகண்டனுடன் இணைந்து ஷான்வி மேக்னா, குரு சோமசுந்தரம், ஆர் சுந்தர்ராஜன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். படம் வரும் ஜனவரி 24ஆம் தேதி வெளியாக இருக்கின்றது
டிரெய்லர் எப்படி இருக்கு: இன்றைய சூழலில் ஒரு குடும்பஸ்தன் எப்படி உருவாகின்றான் என்பதை புதுமையான விதத்தில் காட்டி இருக்கிறார்கள் குடும்பஸ்தன் பட குழுவினர். சமையல் குறிப்புகளை கூறுவது போல ஒரு குடும்பஸ்தன் எப்படி உருவாகின்றான் என்பதை சுவாரஸ்யமாக காட்டி இருக்கிறார்கள். திருமணம் முடிந்த பிறகு குடும்பஸ்தனாக மாறும் ஒரு இளைஞனுக்கு வேலை இல்லாமல் செலவுக்கு கடன் வாங்குகின்றான்.
தன்னுடைய மனைவியை மற்றும் குழந்தையை கவனித்துக் கொள்வதற்காக அவன் எவ்வளவு சிரமப்படுகின்றான் என்பதை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார்கள். ஒரு நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர் பற்றியும் அதனைச் சுற்றியும் கதைக்களம் நகர்வதை டிரைலரில் பார்க்க முடிகின்றது.
குடும்பஸ்தனாக மணிகண்டன் மிகச் சிறப்பாக நடித்திருக்கின்றார். அதிலும் இந்த கதைக்கு ஏற்றபடி சமையல் குறிப்புகளுடன் வரும் வசனம் அட்டகாசமாக இருக்கின்றது. படம் நிச்சயம் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று மணிகண்டனின் ரசிகர்கள் கூறி வருகிறார்கள். அதற்கு ஏற்ற வகையில் டிரெய்லரும் மிகச் சிறப்பாக இருக்கின்றது.