திமுக சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு - பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
Seithipunal Tamil January 19, 2025 06:48 AM

இன்று சென்னை ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் பள்ளி வளாகத்தில் தி.மு.க. சட்டத்துறையின் 3-வது மாநில மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் திட்ட வடிவை மத்திய பாஜக அரசு திரும்ப பெற வேண்டும். ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் நிறைவேற்றப்பட்டால் அதை எதிர்த்து வழக்கு தொடர தீர்மானம்.

ஆளுநரின் செயல்பாட்டுக்கு கண்டனம் தெரிவித்தும், ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் தீர்மானம். சட்டமன்ற நடவடிக்கைகளை புறக்கணிக்கும் ஆளுநர் ரவி, தமிழர்களிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தீர்மானம். பொறுப்பற்ற வகையில் வதந்திகளை பரப்பி வருவதாக எடப்பாடி பழனிசாமிக்கு கண்டனம். 

பாலியல் வன்கொடுமை செய்பவர்களுக்கு கடும் தண்டனை வழங்கும் சட்ட திருத்தத்திற்கு முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம். மத்திய அரசின் மக்கள் விரோத சட்டங்களுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் என்று பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.