பொதுவாக சில குழந்தைகள் வாரம் இருமுறை அல்லது ஒரு முறைதான் மலம் கழிப்பர் .அப்போது அவர்களுக்கு மலசிக்கல் தீர பின் வரும் வீட்டு வைத்திய முறைகள் பலன் தரும்
1.உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு
நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்த உணவுகளை சரியான விகிதத்தில் குழந்தைகளுக்குக் கொடுக்க வேண்டும்.
2. உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு கேரட், முருங்கைக்காய் , தினம் ஒரு கீரை வகைகளோடு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்துள்ள காய்களான வெண்டைக்காய், அவரைக்காய், சுரைக்காய், முள்ளங்கி போன்றவற்றை உணவில் சேர்க்க வேண்டும்.
3.உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு வாழைப்பழம் சிறந்த மலமிலக்கியாக செயல்படும்.
4.வாழைப்பழத்தை தனியாகச் சாப்பிட பிடிக்காத குழந்தைகளுக்கு பாலுடன் சேர்த்து தரலாம். குழந்தைகளின் மலச்சிக்கலைத் தீர்க்க மலை வாழைப்பழம் பெஸ்ட்.
5.உங்கள் குழந்தைகளின் மலச்சிக்கல் பிரச்சனையை தவிர்ப்பதற்கு இரவு ஊறவைத்த 5-10 உலர்திராட்சைகளைக் காலை மற்றும் மாலையில் குழந்தைகளுக்குக் கொடுக்கலாம்.