தமிழக முதல்வர் ஸ்டாலின் உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக ஆக்கியதுதான் திமுக ஆட்சியில் செய்த ஒரே ஒரு சாதனை என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். இது பற்றி அவர் சென்னையில் நடைபெற்ற எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவில் பேசும்போது, திமுக ஆட்சியில் 4 வருடங்களாக மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
இதற்கெல்லாம் 2026 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு விடிவு காலம் பிறக்கும். மகளிர் உரிமைத்தொகை என்பது நாங்கள் போராடி வாதாடி பெற்றுக் கொடுத்தது. திமுக ஆட்சிக்கு வந்து 28 மாதங்கள் ஆன பிறகு தான் மகளிர் உரிமைத்தொகை என்பது வழங்கப்பட்டு வருகிறது. தேர்தல் வாக்குறுதியாக சொன்னதில் 20 சதவீதத்தை கூட திமுக நிறைவேற்றவில்லை. மேலும் ஸ்டாலின் தன் மகனை துணை முதல்வராக ஆகியது மட்டும்தான் திமுக ஆட்சியில் அவர் செய்த ஒரே ஒரு சாதனை என்று கூறினார்.