தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் தற்போது மலையாள சினிமாவில் டொமினிக் அண்ட் தீ லேடீஸ் பர்ஸ் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் மம்முட்டி ஹீரோவாக நடித்துள்ள நிலையில் இது கௌதம் மேனனின் முதல் மலையாள படமாகும். இந்த படம் வருகிற 23ஆம் தேதி ரிலீசாகும் நிலையில் தற்போது பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியின் போது நடிகர் கௌதம் மேனன் சூர்யா குறித்து பேசி ஆதங்கப்பட்டார்.
இது பற்றி அவர் பேசியதாவது, துருவ நட்சத்திரம் படத்தில் முதலில் நான் சூர்யாவை தான் நடிக்க வைக்க அணுகினேன். ஆனால் அவர் என்னை நம்பவில்லை படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். அவருக்கு நான் காக்க காக்க மற்றும் வாரணம் ஆயிரம் ஆகிய வெற்றி படங்களை கொடுத்தும் என்னை நம்பாதது எனக்கு கொஞ்சம் வருத்தத்தை கொடுத்தது. நான் அவரிடம் இருந்து இதை எதிர்பார்க்கவில்லை என்று கூறினார். மேலும் விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திர படம் சில காரணங்களால் ரிலீஸ் ஆகாமல் தள்ளிப் போய்க் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்