மக்களே உஷார்..! அடுத்த 3 மணி நேரத்திற்கு 30 மாவட்டங்களில் வெளுக்க போகுது மழை…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்..!!
SeithiSolai Tamil January 19, 2025 04:48 PM

தமிழகத்தில் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. இந்நிலையில் இன்று மதியம் ஒரு மணி வரை தமிழ்நாட்டில் 30 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தற்போது சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் மிதமான மலைக்கு வாய்ப்புள்ளது. மேலும் இதேபோன்று கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சிவகங்கை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தூத்துக்குடி, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.